உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்துார் கடலில் குளித்த பெண் பக்தருக்கு எலும்பு முறிவு

திருச்செந்துார் கடலில் குளித்த பெண் பக்தருக்கு எலும்பு முறிவு

துாத்துக்குடி : திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று விடுமுறை நாள் என்பதால் பல்லாயிரகணக்கான பக்தர்கள் குவிந்தனர். கோவில் முன் கடலில் புனித நீராடிய அவர்கள், அங்குள்ள நாழிக்கிணற்றில் குளித்து விட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை வழிபட்டனர்.பொது தரிசனத்தில் சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், கோவில் கடற்கரையில் புனித நீராடும்போது நேற்று சேலத்தை சேர்ந்த சித்ரா, 62, என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.உடனே, கோவில் கடற்கரை பாதுகாப்பு வீரர்கள் அவரை திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கடலில் குளிக்கும்போது, பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் தரப்பிலும், போலீசாரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை