உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலை பறிமுதல்

ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலை பறிமுதல்

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியே, இலங்கைக்கு மஞ்சள், வலி நிவாரணி மாத்திரைகள், பீடி இலைகள் உள்ளிட்டவை அடிக்கடி கடத்தப்படுகின்றன. துாத்துக்குடி, தருவைகுளம் கடற்கரை பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சரக்கு வாகனத்தில், 67 மூட்டைகளில் இருந்த 2.5 டன் பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 1 கோடி ரூபாய். அவற்றை படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அதை ஓட்டி வந்த டிரைவர் தஞ்சாவூரை சேர்ந்த சேகுவாரா, 24, என்பவரை கைது செய்தனர்.இரண்டு டூ - வீலர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை