உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது வழக்கு

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது வழக்கு

துாத்துக்குடி:ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக போராடிய, 100க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். துாத்துக்குடி, ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, துாத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன், நேற்று முன்தினம் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு, கலெக்டரிடம் மனு அளித்தனர். நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக திரண்டதாகவும், போக்குவரத்திற்கு இடையூறு அளித்ததாகவும் போராடியோர் மீது புதுக்கோட்டை போலீஸ் எஸ்.ஐ., மாணிக்கராஜா தகவலில், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு தலைமை வகித்த தனீஷ்லாஸ் உட்பட வழக்கறிஞர்கள், ஆலை ஊழியர்கள் என, 25 பேர் மீதும் போக்குவரத்திற்கு இடையூறு அளிக்கும் வகையில் வேன்களை நிறுத்தியிருந்ததாக, 100க்கும் மேற்பட்ட டிரைவர்கள் மீதும் இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை