மேலும் செய்திகள்
டாஸ்மாக் ஊழியரை வழிமறித்து கொள்ளை முயற்சி
28-Aug-2025
துாத்துக்குடி,:பெண் ஏட்டு கணவரை கத்தியால் குத்தி, பணம் பறித்த மூன்று வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜேசுராஜ், 45; டிராக்டர் மூலம் தண்ணீர் சப்ளை செய்யும் தொழில் செய்கிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி; விளாத்திகுளம் காவல் நிலைய ஏட்டு. நேற்று முன்தினம் தமிழ்ச்செல்வி இரவு பணிக்கு சென்றிருந்தார். ஜேசுராஜ் இரவு 10:00 மணியளவில் அங்குள்ள தீப்பெட்டி தொழிற்சாலை அருகே டிராக்டரை நிறுத்தி விட்டு, காவலர் குடியிருப்பிற்கு நடந்து சென்றார். அங்கு பைக்கில் ஆயுதங்களுடன் வந்த மூன்று வாலிபர்கள் அவரை மறித்து, பணம் கேட்டு மிரட்டினர். பின், கத்தியால் குத்தி, மொபைல் போனை பறித்து, ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செயலியான ஜிபேவில் 2,300 ரூபாயை வாங்கி, மொபைல் போனை உடைத்து தப்பினர். ஜேசுராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு, எட்டையபுரம் மருத்துவமனையில் சேர்த்தனர். எட்டயபுரம் போலீசார், மர்ம நபர்களை தேடுகின்றனர்.
28-Aug-2025