திருச்செந்துார் - பாலக்காடு ரயில்களின் சேவையில் மாற்றம்
சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, திருச்செந்துார் - பாலக்காடு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி ரயில்வே யார்டில் மேம்பாட்டு பணிகள் நடப்பதால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் பாலக்காடு - திருச்செந்துார் காலை 6:10 மணி ரயில், வரும் 22, 23ம் தேதி வாஞ்சி மணியாச்சி வரை மட்டுமே இயக்கப்படும் திருச்செந்துார் - பாலக்காடு பகல் 12:20 மணி ரயில், வரும் 22, 23ம் தேதிகளில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து இயக்கப்படும் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் சென்ட்ரல் - திருச்சி காலை 11:35 மணி விரைவு ரயில், வரும் 23ம் தேதி 64 நிமிடங்களாக தாமதமாக சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.