மேலும் செய்திகள்
விபத்தில் 2 வாலிபர்கள் இறப்பு
04-Oct-2025
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
நாசரேத் : நாசரேத் அருகே உள்ள ஆதாளிகுளம் பள்ளி கட்டடத்தை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் ஜெபச்சந்திரன் திறந்து வைத்தார். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் பழனியப்பபுரம் சேகரம் றி.என்.டி.றி.ஏ.ஆரம்ப பள்ளி வளாகத்தில் ரூ.6 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டட திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல துணைத் தலைவர் சாமுவேல் ஜெபம் செய்து துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியை ஜெயமேரி வரவேற்றார். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பொருளாளர் சாமுவேல் செல்வராஜ், லே செயலர் மோகன், திருமண்டல நிர்வாககுழு உறுப்பினர் நாசரேத் துரை, ஊர் பிரமுகர் அலங்காரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பிஷப் ஜெபச்சந்திரன் தலைமை வகித்து புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். விழாவில் மர்காஷிஸ் சபை மன்ற தலைவர் குருவானவர் யோசுவா, நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன், ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி தாளாளர் லேவி அசோக் சுந்தர்ராஜ், நாசரேத் நகர பஞ்.,தலைவர் மாமல்லன், ஊர் பிரமுகர்கள் பெற்றோர், மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனியப்பபுரம் சேகர குருவானவரும், பள்ளி தாளாளருமான அகஸ்டஸ் பால்பாண்டியன் தலைமையில் உதவி ஆசிரியை ஷீலா, சேகர செயலர் மாணிக்கராஜ், டயோசீசன் கவுன்சில் உறுப்பினர்கள் தனராஜ், பாஸ்கர் செய்திருந்தனர்.
04-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025