உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / அதிமுக., பொதுக்கூட்டம்

அதிமுக., பொதுக்கூட்டம்

உடன்குடி : உடன்குடியில் அதிமுக.,சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. உடன்குடியில் தமிழக முதல்வர் ஜெ.,யின் ஆணையின்படி முன்னாள் முதல்வர் அண்ணாவின் 103வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் உடன்குடி பஜார் பாரதி திடலில் நடந்தது. உடன்குடி டவுன் பஞ்., கழக செயலாளர் கோயில்மணி தலைமை வகித்தார். மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் பொன்ஸ்ரீராம் வரவேற்றார். ஊராட்சி கழக செயலாளர் சங்கரலிங்கம், ராஜ்குமார், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமை பேச்சாளர் நாஞ்சில் ஞானதாஸ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் செல்லத்துரை, மாவட்ட பஞ்.,கவுன்சிலர் மனோஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் மூர்த்தி, மாவட்ட மகளிரணி தலைவி ஆயிஷாகல்லாசி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் மரியம் சேர்மத்துரை, உடன்குடி ஒன்றிய எம்ஜிஆர்.,மன்ற செயலாளர் பரமசிவம், ஒன்றிய ஜெ.,பேரவை செயலாளர் சிவலூர் சாரதி, ஒன்றிய எம்ஜிஆர்.,இளைஞரணி செயலாளர் பாலமுருகன், பெரியபுரம் பிரபாகர் முருகராஜ், ஒன்றிய மகளிரணி செயலாளர் லெட்சுமி, ஒன்றிய அண்ணா தொழிற்சங்க பொறுப்பாளர் முத்துச்சாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டியன், உடன்குடி ஒன்றிய பொருளாளர் குலசை சுடலை, செட்டியாபத்து மகேந்திரன், சன்னியாசி உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் டவுன் பஞ்.,ஜெ.,பேரவை செயலாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உடன்குடி ஒன்றிய அதிமுக.,செயலாளர் அம்மன்நாராயணன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ