| ADDED : செப் 22, 2011 12:09 AM
திருச்செந்தூர் : திருச்செந்தூரில் இந்துமக்கள் கட்சியின் உள்ளாட்சி
தேர்தல் பணிக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் குலசேகரன்பட்டணம்
முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவிற்கு இலவச பஸ்வசதிவேண்டும் என கோரிக்கை
வைத்துள்ளனர். திருச்செந்தூரில் நடந்த இந்துமக்கள் கட்சியின் உள்ளாட்சி
தேர்தல் பணிக்குழு கூட்டத்திற்கு ஒன்றிய அமைப்பாளர் அருண் அம்பேத்கர் தலைமை
வகித்தார். நகர அமைப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மகளிர் அணி
அமைப்பாளர் அம்பிகை அம்பேத்கர், தூத்துக்குடி மாவட்ட செயலாளர்
ரவிகிருஷ்ணன், மாவட்ட தலைவர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த
கூட்டத்தில் திருச்செந்தூர் யூனியனில் கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள்,
வார்டு உறுப்பினர்கள் வரும் 27ம் தேதி அறிமுகப்படுத்துவது எனவும், பெட்ரோல்
விலை உயர்வை குறைக்காத மத்திய அரசை கண்டிப்பது எனவும், குலசை முத்தாரம்மன்
கோயில் தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தகுந்த பாதுகாப்பும்,
இலவச பஸ் வசதியும் செய்து தர வேண்டுவது எனவும், அன்னதான திட்டத்தை இன்னும்
பல கோயிலுக்கு செய ல்படுத்த வேண்டும் எனவும், 106 கோயிலுக்கு அன்னதான
திட்டத்தை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தோப்பூர் பழனி மாணிக்கம், சுந்தரம்,
மாசிலாமணி, சிவக்குமார், பிரதாபன், கார்த்திகேயன், வைகு ண்டராட்சி, சங்கர்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.