தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. இதில் தற்போதுள்ள 7 மாநகராட்சி கவுன்சிலர்களுக்கும் அமைச்சர் செல்லபாண்டியனின் மனைவிக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக., தலைமை வெளியிட்டுள்ளது. 1வது வார்டு-ஜெயசெல்வி, 2வது வார்டு-ராதாகிருஷ்ணன்(மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர்), 3வது வார்டு-கோகிலா, 4வது வார்டு-முருகன்(வார்டு செயலாளர்), 5வது வார்டு-ஜெபக்குமார், 6வது வார்டு-அசோக்குமார், 7வது வார்டு-இளையராஜா, 8வது வார்டு-மகாலெட்சுமி(3வது வார்டு மேலமைப்பு பிரதிநிதி), 9வது வார்டு-சாந்தி, 10வது வார்டு-அந்தோணி கிரேஸ்(மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்), 11வது வார்டு-ரொசாரி(வார்டு மகளிர் அணித் தலைவர்), 12வது வார்டு-முருகேசன், 13வது வார்டு-முப்புடாதி, 14வது வார்டு-வீரபாகு(27வது வார்டு செயலாளர்), 15வது வார்டு-ரத்தினம், 16வது வார்டு-மெஜிலா, 17வது வார்டு-செல்வி(வார்டு இணைச் செயலாளர்), 18வது வார்டு-சேவியர்(மாவட்ட மீனவர் பிரிவு துணைச் செயலாளர்), 19வது வார்டு-சாலமன் ஜெயசீலன்(நகர மாணவர் பிரிவுச் செயலாளர்), 20வது வார்டு-அகஸ்டின்(மாவட்ட மீனவர் அணிச் செயலாளர்), 21வது வார்டு-சகாயராஜ்(நகர கழக துணைச் செயலாளர்), 22வது வார்டு-ஜெயராணி, 23வது வார்டு-சகாயராஜா(நகர இளைஞர், இளம்பெண் பாசறை துணைத் தலைவர்), 24வது வார்டு-கித்தேரியம்மாள், 25வது வார்டு-சந்திரா, 26வது வார்டு-சாமுவேல், 27வது வார்டு-பீர் பாத்திமா, 28வது வார்டு-சந்திரா, 29வது வார்டு-அமிர்தகணேசன்(மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்), 30வது வார்டு-ஏசாதுரை(நகர செயலாளர்), 31வது வார்டு-ராமலெட்சுமி(நகர மகளிர் அணித் தலைவர்), 32வது வார்டு-ரெமோலா ராணி, 33வது வார்டு- அந்தோணி விக்டோரியா(எ) அந்தோணியப்பா(மாவட்ட மீனவர் பிரிவு துணைத் தலைவர்), 34வது வார்டு- முருகேசன், 35வது வார்டு-முருகன்(வட்ட ஜெ.,பேரவைச் செயலாளர்), 36வது வார்டு-கமலக்கண்ணன், 37வது வார்டு-வெள்ளப்பாண்டி(வார்டு செயலாளர்), 38வது வார்டு-ஜெயபாரதி மனோகர், 39வது வார்டு-முபாரக் ஜான்(வார்டு மேலமைப்பு பிரதிநிதி), 40வது வார்டு- தங்க இலக்கியம், 41வது வார்டு-இந்திரா, 42வது வார்டு-ராபர்ட் ஹென்றி, 43வது வார்டு-ஜெயக்குமார்(மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்), 44வது வார்டு-பெருமாள்(வார்டு கழக செயலாளர்), 45வது வார்டு-அந்தோணிராஜ்(வார்டு செயலாளர்), 46வது வார்டு-மாரியப்பன்(வார்டு செயலாளர்), 47வது வார்டு-முருகேசன்(வார்டு மேலமைப்பு பிரதிநிதி), 48வது வார்டு-சந்தனம்(கீழ்புத்தனேரி கிளை செயலாளர்), 49வது வார்டு-ஜெபமணி(மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைத் தலைவர்), 50வது வார்டு-சண்முகத்தாய், 51வது வார்டு-நெல்சன், 52வது வார்டு-ஜெகதீசன், 53வது வார்டு-ஷேக்முகம்மது, 54வது வார்டு-செல்வராஜ், 55வது வார்டு-மாரியப்பன்(தூத்துக்குடி ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர்), 56வது வார்டு-செல்லம்மாள், 57வது வார்டு-சேகர்(மாவட்ட இளைஞர், இளம்பெண் பாசறை துணைச் செயலாளர்), 58வது வார்டு-கோட்டாளமுத்து(அத்திமரப்பட்டி கிளைச் செயலாளர்), 59வது வார்டு-சுடலைமணி, 60வது வார்டு-வளர்மதி ஆகியோர் கவுன்சிலர் பதவிக்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் முருகேசன், வீரபாகு, சந்திரா, சந்திரா, கித்தோரியம்மாள், ஜெயபாரதி மனோகர், ஜெயக்குமார் ஆகியோர் தற்போதைய மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆவர்கள். அமைச்சர் மனைவி கவுன்சிலர் வேட்பாளர் தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக., கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்களின் பல கட்சி பதவிகளையும் வகித்து வருகின்றனர். சீட் கிடைக்காத மற்ற அதிமுக, கவுன்சிலர்கள் எல்லாம் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிமுக., சார்பில் வெளியிடப்பட்டுள்ள கவுன்சிலர் வேட்பாளர் பட்டியலில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியனின் மனைவியும் அடங்குவார். இவரது மனைவி இந்திரா 41வது வார்டில் அதிமுக., சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். அமைச்சர் பதவியில் உள்ளவரின் மனைவிக்கு கவுன்சிலர் பதவிக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ள அதிமுக.,வினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.