| ADDED : செப் 23, 2011 01:04 AM
ஆறுமுகநேரி : சாகுபுரம் லயன்ஸ் கிளப்பிற்கு லயன்ஸ் மண்டல தலைவர்
அதிகாரபூர்வ வருகை தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கினர். கூட்டத்திற்கு சாகுபுரம் லயன்ஸ் கிளப் தலைவர் சந்திரசேகரன் தலைமை
வகித்தார். வட்டார தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். உலக அமைதி
வேண்டி ஒரு நிமிடம் மௌனம் அனுஷ்டித்தனர். செயலாளர் பொன்சரவணன் அறிக்கையை
சமர்ப்பித்தார். லயன்ஸ் கிளப் மண்டல தலைவர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
பிரகாஷ் அறிமுகம் செய்து வைத்து பேசினார். இதனை முன்னிட்டு நலத்திட்ட
உதவிகள் வழங்கினர். ஆறுமுகநேரியைச் சேர்ந்த வேலம்மாளுக்கு மாவு அரைக்கும்
இயந்திரம் வழங்கினர். இதனை டி.சி.டபிள்யூ நிறுவன உதவித் தலைவர்
ஜெயக்குமார், மூத்த பொது மேலாளர் சாம்பசிவம் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் தமிழக அரசின் நல்லாசிரியை விருது பெற்ற திருச்செந்தூர்
ஸ்ரீராமையா பாகவதர் நினைவு செந்தில் ஆண்டவர் நடுநிலைப்பள்ளி ஆசிரியை
ரேணுகாவை பாராட்டி கௌரவித்தனர். நிகழ்ச்சியை ராஜேந்திரன் தொகுத்து
வழங்கினார். கூட்டத்தில் ஆறுமுகநேரி லய ன்ஸ் கிளப் பட்டய தலைவர்
சண்முகவெங்கடேசன், செயலாளர் முருகேசன் மற்றும் திருச்செந்தூர்,
திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதியில் இருந்து லயன்ஸ் கிளப்
நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விக்டா லயோலா நன்றி கூறினார்.