உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி கோவில்பட்டி பள்ளி சாதனை

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி கோவில்பட்டி பள்ளி சாதனை

தூத்துக்குடி : மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் கோவில்பட்டி கே.ஆர்.ஏ வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். கோவில்பட்டி கல்விமாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள் ஓட்டப்பிடாரம் டிஎம்பி மெக்கவாய் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் கோவில்பட்டி கே. ஆர்.ஏ.வித்யாஷ்ரம் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் பல்வேறு போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளனர். இளையோர் மற்றும் மூத்தோர் கூடைப்பந்துபோட்டியில் முதலிடமும், இளையோர் மகளிர் சதுரங்கள் முதலிடம், இளையோர் மகளிர் சதுரங்க போட்டியில் இரண்டாம் இடம், இளையோர் இறகுப்பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம், இளையோர் சதுரங்கப்போட்டியில் முதலிடம், மூத்தோர் சதுரங்கப்போட்டியில் முதலிடமும், 100 மீட்டர் ஓட்டத்தில் இளையோர் பிரிவில் தீபக் கணேஷ் முதலிடமும், மூத்தோர் தடை ஓட்டத்தில் ராஜஆனந்தன் முதலிடமும் பெற்றனர். மூத்தோர் பிரிவு குண்டு எறிதல் போட்டியில் மாணவர் தியாகராஜன் மூன்றாம் இடமும், நீளம்தாண்டுதலில் மாணவர் கௌதம் சாம்பியன் பதக்கம்பெற்றார். மிக மூத்தோருக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் மாணவர் அபிசேக் குமார் முதலிடத்தையும், மகளிர் மிக மூத்தோர் பிரிவில் குண்டுஎறிதல் மற்றும் வட்டு எறிதலில் விஜயவர்ஷா முதலிடமும், மகளிர் மிக மூத்தோர் பிரிவில் மாணவி பிரீத்தி நீளம் தாண்டுதலில் மூன்றாம் இடமும் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவர்களையும, பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராம்குமார், சாந்தி ஆகியோரையும் பள்ளிச்செயலாளர் செல்வராஜ், முதல்வர் ஜெயக்குமார் நிர்வாக அலுவலர் ருத்ரமூர் த்தி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ