மேலும் செய்திகள்
தெருநாய் கடித்து 5 ஆடுகள் பலி
09-Dec-2024
கோவில்பட்டி : துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியராஜ், 44. விவசாயி. இவர், கால்நடை வளர்ப்பு தொழிலிலும் செய்கிறார். தோட்டத்தில் உள்ள வீடு அருகே தொழுவம் அமைத்து அதில், 15 வெள்ளாடுகள் வளர்ந்து வந்தார்.நேற்று அதிகாலை தொழுவில் ஐந்து நாய்கள் சேர்ந்து ஆடுகளை கடித்து குதறிக் கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், நாய்களை விரட்டினார். இருப்பினும், ஆறு ஆடுகள் இறந்தன. ஒன்பது ஆடுகள் காயமடைந்து உயிருக்கு போராடி வருகின்றன. ஜமீன் தேவர்குளம் அரசு கால்நடை மருத்துவமனை டாக்டர் மற்றும் குழுவினர் ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.விவசாயி பாண்டியராஜ் கூறியதாவது: விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆடுகள் வளர்ப்பு கை கொடுக்கும் என நினைத்தேன். நாய்கள் கடித்து ஆடுகள் இறந்ததால், என்னுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
09-Dec-2024