உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி /  பெண் எஸ்.ஐ., கணவர் வெட்டி கொலை

 பெண் எஸ்.ஐ., கணவர் வெட்டி கொலை

துாத்துக்குடி: சாத்தான்குளம் அருகே பெண் எஸ்.எஸ்.ஐ.,யின் கணவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மெட்டில்டா ஜெயராணி. இவரது கணவர் ஜேம்ஸ் சித்தர், 54; டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர், நேற்று மாலை சொந்த ஊரான சாத்தான்குளம் அருகே திருப்பணி புத்தன்தருவை கிராமத்திற்கு பைக்கில் சென்றார் . அங்கு தனியாக வசித்து வரும் தாயை சந்தித்து விட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். தொடையில் வெட்டு காயம் ஏற்பட்ட ஜேம்ஸ் சித்தர் மயங்கி விழுந்தார். வெகுநேரமாக ரத்தம் வெளியான நிலையில், தகவல் அறிந்த சிலர் அவ ரை மீட்டு, சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கணவர் வெட்டப்பட்ட சம்பவம் குறித்த தகவல் அறிந்த மெட்டில்டா, சாத்தான்குளம் மருத்துவமனைக்கு சென்றார். அவர் இறந்துவிட்டார் என்ற தகவல் தெரிந்ததும் கதறி அழுதார். தட்டார்மடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ