மேலும் செய்திகள்
த.வெ.க., நிர்வாகி செயலால் பரபரப்பு
26-Dec-2025
பஸ் ஸ்டாண்டில் கூரை பூச்சு பெயர்ந்தது
18-Dec-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி மார்க்கெட், வி.இ.ரோடு பகுதியில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருவோர், சாலையோரம் நடைபாதையில் தங்குவது வழக்கம்.இங்கு, வேலுாரை சேர்ந்த சந்தியா குடும்பத்தினர் தங்கி உள்ளனர். இவருக்கு நான்கு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை தனக்கு அருகில் படுக்க வைத்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு சந்தியா துாங்கினார்.அதிகாலை எழுந்து பார்த்த போது, குழந்தையை காணவில்லை. மர்ம நபர்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலின் படி, துாத்துக்குடி போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26-Dec-2025
18-Dec-2025