மேலும் செய்திகள்
100 கிலோ கடல் அட்டை பறிமுதல்
08-Jul-2025
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் டூவீலரில் கடத்தப்பட்ட 15 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்த வனத்துறையினர் ஒருவரை கைது செய்தனர். மன்னார் வளைகுடா கடலில் அரியவகை கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் மருத்துவ பயன்பாடு உள்ளிட்டவற்றுக்காக கடல் அட்டை, கடல் குதிரை போன்றவைகளை பிடித்து வேக வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் வன உயிரின பாதுகாப்பு கடல்சார் உயரடுக்கு படை பிரிவு ரேஞ்சர் செல்வம் மற்றும் வன அலுவலர்கள் தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் பாசிபட்டினம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா முத்துகுடாவை சேர்ந்த மருதய்யா மகன் விஸ்வநாதன் 38, சென்ற டூவீலரை சோதனை செய்தனர். அதில் ஒரு சாக்குப்பையில் பச்சை கடல் அட்டை 15 கிலோ இருந்தது. விஸ்வநாதனை கைது செய்த வனத்துறையினர், கடல் அட்டை, டூவீலரை பறிமுதல் செய்தனர். ஊரில் இருந்து விற்பனைக்காக கடத்தியது தெரியவந்தது.
08-Jul-2025