உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மிளகாய் பழங்களை காப்பாற்ற முயன்ற பிளஸ் 2 மாணவி பலி

மிளகாய் பழங்களை காப்பாற்ற முயன்ற பிளஸ் 2 மாணவி பலி

துாத்துக்குடி: பிளஸ் 2 தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருந்த மாணவி, மின்னல் தாக்கி பலியானார்.துாத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே குரளையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகள் முத்து கவுசல்யா, 17. தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த இவர், அரசு பொதுத்தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார்.விளாத்திக்குளம் பகுதியில், நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வீட்டின் அருகே காய வைக்கப்பட்டிருந்த மிளகாய் பழங்கள் மழையில் நனையாமல் இருக்க, தார்ப்பாயால் மூடுவதற்காக அந்த சிறுமி சென்றார்.அப்போது, திடீரென மின்னல் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். அவரின் உடலைப் பார்த்து, தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். விளாத்திக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை