மேலும் செய்திகள்
துாத்துக்குடி எஸ்.பி., என்.ஐ.ஏ.,க்கு மாற்றம்
24-Sep-2025
துாத்துக்குடி: தமிழக காவல் துறையில் பணிபுரிவோருக்கு வழங்கப்படும் வார விடுமுறையை அந்தந்த காவல் நிலைய அதிகாரிகளின் அனுமதி பெற்று எடுத்துக்கொள்ளும் நடைமுறை தற்போது உள்ளது. இந்நிலையில், துாத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரின் வாராந்திர ஓய்வு முறையை தொழில்நுட்ப முறையில் எளிதாக்க, 'வீக் ஆப் கோடு' எனும் புதிய கியூ.ஆர்., கோடு முறையை மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் நேற்று அறிமுகம் செய்தார். இந்த கோடு அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த கோடை காவல்துறையினர் தங்கள் மொபைல் போனில் ஸ்கேன் செய்து, தங்களுக்கான வாராந்திர ஓய்வு நாளை எடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றி பதிவு செய்ய வேண்டும். அந்த பதிவு நேரடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியின் ஒப்புதலுடன், ஓய்வு வழங்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த முறை காவல் துறையினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
24-Sep-2025