வாசகர்கள் கருத்துகள் ( 1 )
குடி போதை, மிரட்டல் செய்த இவருக்கு IPC இல்லையா suspension மட்டுமா. இந்த மாதிரி இருப்பதனால்தான் காக்கி சட்டை போட்டவர்களின் குற்றங்கள் வெளியில் வராமல் அதிகமாகி உள்ளன.
ஆத்துார் : பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ் ஏட்டை, 'சஸ்பெண்ட்' செய்து துாத்துக்குடி எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் சரவணன், 45. இவர், தெற்கு ஆத்துார் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகி வந்தார். பின், இருவருக்கும் திடீரென பிரச்னை ஏற்பட்டது. அந்த பெண் ஆத்துார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். குடிபோதையில் இருந்த ஏட்டு சரவணன், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்து, புகாரை திரும்பப் பெற வேண்டும் என, கூறியுள்ளார்.பாதிக்கப்பட்ட பெண், ஆத்துார் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தார். போலீசார், எஸ்.பி.,க்கு அறிக்கை தாக்கல் செய்தனர். சரவணனை, 'சஸ்பெண்ட்' செய்து, எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் நேற்று உத்தரவிட்டார்.
குடி போதை, மிரட்டல் செய்த இவருக்கு IPC இல்லையா suspension மட்டுமா. இந்த மாதிரி இருப்பதனால்தான் காக்கி சட்டை போட்டவர்களின் குற்றங்கள் வெளியில் வராமல் அதிகமாகி உள்ளன.