டூவீலர் ஓட்டிய சிறுவனின் தந்தைக்கு ரூ.25 ஆயிரம்
துாத்துக்குடி: துாத்துக்குடியில் சிறுவனை டூவீலர் ஓட்ட அனுமதித்த தந்தைக்கு போலீசார் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.துாத்துக்குடி மேலசண்முகபுரத்தில் போக்குவரத்து போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிறுவன் ஒருவர் ஓட்டி வந்த டூவீலரை பறிமுதல் செய்தனர். மோட்டார் வாகனச் சட்டத்தை மீறி சிறுவனுக்கு வாகனம் ஓட்ட அனுமதியளித்த அவரது தந்தைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.