மேலும் செய்திகள்
தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து
16-Oct-2024
துாத்துக்குடி:கருவாடு ஏற்றுமதி கோடவுனில் இருந்து இலங்கைக்கு கடத்தயிருந்த 2 டன் விரலி மஞ்சளை சுங்கத்துறை, மரைன் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.துாத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு சுங்கத்துறை அதிகாரிகள், மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சி முத்து மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.சிலுவைப்பட்டி கடற்கரை சாலையில் உள்ள தனியார் கருவாடு ஏற்றுமதி கோடவுனில் விரலிமஞ்சள் பதுக்கி உள்ளதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்றபோது 2 டன் விரலி மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதிகாரிகள் விசாரணையில், கோடவுனில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்த இருந்தது தெரிந்தது. விரலி மஞ்சளை போலீசார் பறிமுதல் செய்தனர். விரலிமஞ்சள் இந்திய மதிப்பு ரூ. 2 லட்சம், இலங்கை மதிப்பில் ரூ. 40 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
16-Oct-2024