உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கரும்புச்சாறு கடைக்கு பட்டதாரிகள் தேவையாம்!: ரூ.18 ஆயிரம் சம்பளம்: வைரலாகும் பேனர்

கரும்புச்சாறு கடைக்கு பட்டதாரிகள் தேவையாம்!: ரூ.18 ஆயிரம் சம்பளம்: வைரலாகும் பேனர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே புதிதாக தொடங்க உள்ள கரும்புச்சாறு கடையில் வேலைக்கு பிஇ, பிஏ, பி.எஸ்சி பட்டதாரிகள் தேவை என்றும், சம்பளம் 18 ஆயிரம் எனவும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள பேனர் வைரலாகியுள்ளது.தற்போது பல்வேறு தொழில்கள் பெருகி வருகின்றன. எனினும் பழைய காலம் போல மக்களிடம் உடல் உழைப்பு என்பது குறைந்து வருகிறது. இயந்திரங்களில் மூலம் பணி நடந்தாலும் பணிபுரிய சொற்ப நபர்களே தேவையென்றாலும் அதற்கும் வேலையாட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வட மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வேலைக்கு குவிந்து வருகின்றனர். மேலும் பலர் தாங்கள் படித்த படிப்பிற்கேற்ற வேலை தான் பார்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பதால் பல துறைகளில் வேலையாட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெய்ஞானபுரத்தில் புதிதாக தொடங்க உள்ள கரும்பு கடை ஒன்றில் வைத்துள்ள பேனர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த பேனரில் கரும்புச்சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை; சம்பளம் ரூ.18 ஆயிரம், வேலை நேரம் காலை 8:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் அதற்கான கல்வி தகுதி பிஇ, பிஏ, பி.எஸ்சி என்றும், வயது வரம்பு 25 முதல் 40 வரை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேனர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

கோவிந்தராஜ்
ஜூலை 20, 2024 04:03

இது சும்மா கடை விளம்பரத்துக் கா ன. ஏற்பாடா இருக்கலாம்


Bala
ஜூலை 19, 2024 21:36

கரும்புச்சாறு அங்காடியா அல்லாது கள்ளச்சாராய அங்காடியா?


Balasubramanian
ஜூலை 19, 2024 21:16

வேண்டாம் தம்பி ரூ 18000 துக்கு ஆசைப்பட்டு போயிராதீங்க! வார விடுப்பு கூட இல்லாமல் 90 மணி நேர வேலை! கரும்பு பிழிகிற மாதிரி உங்களையும் சக்கையாக பிழிந்து எடுத்து விடுவார்கள்! ஐடி கம்பெனியில் ஐந்து நாட்கள் 40 மணி நேர வேலை! கால் மேல் கால் போட்டு ரூ 40,000 சம்பாதிக்கலாம் - அது கிடைக்கும் வரை அப்பா காசில் டாஸ்மாக்கில் கோதுமை பீர் குடித்து சினிமா பார்த்து காலத்தை ஓட்டவும்


KRISHNAN R
ஜூலை 19, 2024 20:57

இது ஒரு விளம்பர உத்தி


konanki
ஜூலை 19, 2024 19:13

இதற்கும் மேற்கு வங்காளம் ஜார்க்கண்ட் பீஹார் மாநிலத்தில் இருந்து தான் வேலைக்கு வருவார்கள். மரத் தமிழன் சரக்கு அடித்து குப்புற தூங்குவான்.ஓசி ல் ரேஷன் பஸ் 100 நாள் ஓசி பணம் வேஷ்டி புடவை எலெக்ஷன் போது ஓசி சாராயம் காக்கா பிரியாணி 500 ரூபாய் . இதெல்லாம் இருக்கும் போது மரத் தமிழன் வேலைக்கு வர மாட்டேன்


theruvasagan
ஜூலை 19, 2024 17:41

எல்லாத்துக்கும் இலவசம். சாப்பாட்டுக்கு என்ன கொறைச்சல். அப்புறம் சரக்கு அடித்துவிட்டு மட்டையாகிக் கிடக்க டாஸ்மாக் இருக்கவே இருக்கு. எதுக்கு உழைக்கணும். ஐநூறோ ஆயிரமோ சரக்கு பிரியாணியோட வாங்கிவிட்டு ஓட்டை வித்துட்டு அஞ்சு வருஷம் ஜாலியா ஓட்டலாம் என்று இருக்கறவனுக உழைப்பை பற்றி எதுக்கு யோசிக்கணும். அதுக்குத்தான் வடக்கத்திக்காரனுக இருக்காங்களே. மாடல் ஆட்சியில் தமிழன் உழைப்பது சமுதாயக் குற்றம்.


tmranganathan
ஜூலை 19, 2024 17:35

என்ன சொல்லவரீர் முதல்வரே?


Lion Drsekar
ஜூலை 19, 2024 17:11

கிராமத்தில் விவசாய நிலங்களை விற்றுவிட்டு , பட்டினத்துக்கு மகனை அழைத்துவந்து பொறியியல் கல்லூரிக்கு வந்து மகனை சேர்த்துவிட்டு வந்தாராம் . அப்போது வெளியே ஒரு மனிதர் மிகவும் மரியாதையாக இவர்களை வழிஅனுப்பியதைக் கண்டு மனம் உருகி , பாராட்டுக்கள் நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள் என்று அந்த விவசாயி கேட்டாராம் , ஐயா நான் இந்தக்கல்லூரியில்தான் படித்தேன் என்று கூற விவசாயிக்கு ஒரே மகிழ்ச்சி , தன மகனிடம் பார்த்தாயா , நீயும் இதே போன்று வரவேண்டும் என்று கூறிவிட்டு , தாங்கள் இப்போது எங்கு வேலைப்பார்க்கிறீர்கள் என்று கேட்க , அவர் சற்றும் தயங்காமல் , ஐயா நான் படித்து முதவுடனே இந்த கல்லூரியின் முதலாளி எனக்கு இங்கேயே வேலைபோட்டுக் கொடுத்துவிட்டார் என்று கூறியவுடன். விவசாயி தன மகனிடம் , நீயும் இதே மாதிரி நல்ல பெயர் எடுத்து இதே கல்லூரியில் பணியாற்றவேண்டும் என்று கூறி, இங்கு என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்க, நான் காவல் ஆங்கிலத்தில் secutiry என்று சொல்வார்கள் என்று கூறினார் . வந்தே மாதரம்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை