உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்துாரில் நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை

திருச்செந்துாரில் நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை

துாத்துக்குடி:திருச்செந்துார் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், துாத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு வரும் 7ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 7ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. 'இதையொட்டி, அன்றைய தினம் துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 'அரசு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருந்தால், இந்த விடுப்பு பொருந்தாது. இந்த விடுமுறைக்கு பதிலாக வரும் 19ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை