உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்தூரில் இலவச மருத்துவ முகாம்

திருச்செந்தூரில் இலவச மருத்துவ முகாம்

தூத்துக்குடி : அனைவருக்கும் கல்வி இயக்கம் - மாற்றுத்திறனுடையவர்களுக்கான உள்ளடங்கிய கல்வித்திட்டம் மற்றும் அருள்ராஜ் மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை இணைந்து திருச்செந்தூரில் இலவச மருத்துவ முகாம் நடத்தியது.இந்த முகாமினை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் பகவதி துவக்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடங்கிய கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணம்மாள், திருச்செந்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சாவித்திரி, ஒருங்கிணைப்பாளர் முத்துலெட்சுமி, அருள்ராஜ் மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஐவன்வனஜ் குமார் போன்றோர் முன்னிலை வகித்தனர். முகாமில் செல்லாமேரி, ஆத்திக்குமார், மாரிமுத்து, ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டு 72 மாற்றுத் திறனாளி குழந்தைகளை பரிசோதித்து 27 நபர்களுக்கு அடையாளஅட்டை, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முடநீக்கு அறுவைசிகிச்சை, 6 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், 2 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கண்கண்ணாடி, 7 நபர்களுக்கு காதொலிக்கருவி மற்றும் தேவைப்படும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, பாதுகாவலர் பேருந்து சலுகை போன்ற அரசு நலத்திட்ட உதவிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. முகாமில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பிஸியோதெரபிஸ்ட்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை அருள்ராஜ் மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி