உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மின்வயரில் லாரி உரசி மரக்கரித்தூள் மூடை எரிந்து சாம்பல்

மின்வயரில் லாரி உரசி மரக்கரித்தூள் மூடை எரிந்து சாம்பல்

எட்டயபுரம் : எட்டயபுரம் அருகே லாரி மின்வயரில் உரசியதால் லாரியில் இருந்த மரக்கரித்தூள் மூட்டைகள் தீப்பிடித்து சேதமடைந்தது.சாத்தூர் அருகே சிந்துவாப்பட்டி கிராமத்தை சார்ந்த வியாபாரி உதயசூரியன். இவர் எட்டயபுரம் அருகே சங்கரலிங்கபுரத்திலிருந்து ஒரு லாரியில் மரக்கரித்தூள் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு எட்டயபுரம்-விளாத்திகுளம் ரோட்டில் சென்றார். லாரியை டிரைவர் சாத்தூர் சிவராஜ்(48) ஓட்டி வந்தார். அப்போது மின்வயர் உரசியதில் லாரியில் உள்ள மரக்கரித்தூள் மூட்டைகளில் தீப்பிடித்தது. உடனடியாக மரக்கரித்தூள் மூட்டைகளை லாரியிலிருந்து அப்புறப்படுத்தினர். 300 மூட்டைகள் எரிந்து சேதமடைந்தது. உடனடி நடவடிக்கையால் லாரிக்கு சேதாரம் ஏற்படவில்லை. விளாத்திகுளம் தீயணைக்கும் நிலைய அதிகாரி (பொறுப்பு) கோமதிஅமுதா தலைமையில் தீயை அணைத்தனர். இதனால் அந்த ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை