உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஸ்ரீவை.,யில் 1008 சிவலிங்க பூஜை

ஸ்ரீவை.,யில் 1008 சிவலிங்க பூஜை

ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் திருக்கோயிலில் ஆயிரத்துஎட்டு சிவலிங்க பூஜைநடந்தது. ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயில் நவகைலாயங்களில் ஒன்று ஆகும். கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடந்து வருகிறது. திருப்பணிகள் சிறப்பாக நடப்பதற்காக பக்தர்கள், ஸ்ரீவைகுண்டம் சுபிட்சம் பெருவதற்காகவும், கைலாசநாதர் கைங்கரிய சபாவினர் கோயில் நிர்வாகத்தினர் சார்பில் 1008 சிவலிங்க பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு சுவாமி அம்பாள் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. ஆயிரத்து எட்டு பெண்கள் 1008 சிவிலிங்க சிலைகள் முன் அமர்ந்து ஆயிரத்து எட்டு மந்திரங்கள் செபித்து தீபாராதனை செய்தனர். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது. விழாவில் சபாரத்தினதங்கம், பேராசிரியர் சேதுராமன், பொன்பாண்டியன், திருவேங்கடராமன், நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை பக்தர்கள், சபையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ