உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கோவில்பட்டியில் அரசு ஊழியர் சங்க மாநாடு

கோவில்பட்டியில் அரசு ஊழியர் சங்க மாநாடு

கோவில்பட்டி : சுதந்திர போராட்ட வீரர்கள் பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரில் கல்லூரிகள் அமைக்க கோரி கோவில்பட்டியில் நடந்த அரசு ஊழியர் சங்க ஒன்பதாவது வட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவில்பட்டியில் நடந்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஒன்பதாவது வட்ட மாநாட்டிற்கு வட்டத் தலைவர் முத்துச்சாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆறுமுகலட்சுமி வரவேற்றார். வேலை அறிக்கையை செயலாளர் சின்னத்தம்பியும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் மாரியப்பனும் வாசித்தனர். மாநில செயலாளர் குமாரவேல், மாவட்ட தலைவர் டெரன்ஸ், துணைத் தலைவர் முருகன் ஆகியோர் பேசினர். வரையறுக்கப்படாத ஊதியம் பெறும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலர்கள், மக்கள் நல பணியாளர்கள், கிராமப்புற நூலகர்கள், வருவாய் கிராம ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவும், உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை