உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / வ.உ.சியை அதிமுக.,தான் கௌரவித்துள்ளது : அமைச்சர் சண்முகநாதன் பெருமிதம்

வ.உ.சியை அதிமுக.,தான் கௌரவித்துள்ளது : அமைச்சர் சண்முகநாதன் பெருமிதம்

ஓட்டப்பிடாரம் : ஓட்டப்பிடாரத்தில் நடந்த வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் அரசு விழாவில் வ.உ.சி.யை அதிமுக.,மட்டுமே கௌரவித்துள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் பேசினார்.ஓட்டப்பிடாரம் டிஎம்பி மெக்கவாய் கிராமிய மேல்நிலைப்பள்ளியில் வ.உ.சிதம்பரனார் 140-வது பிறந்தநாள் அரசு விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் ஆஷிஷ்குமார் தலைமை வகித்தார். வ.உ.சிதம்பரனாரின் உருவ படத்தை திறந்து வைத்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் பேசியதாவது, தியாகிகளை கௌரவிக்கும் விதமாக அரசு விழா எடுக்கப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தைச் சேர்ந்த வ.உ.சி.,க்கு விழா எடுப்பது தமிழகம் மட்டும் அல்ல, உலகமெங்கும் அவருக்கு புகழ் சேர்க்கிறது. சிறையில் அவர் சித்திரவதை செய்யப்பட்டு அங்கு எண்ணெய் எடுப்பதற்கு மாடுகளை வைத்து இழுக்கும் செக்கை ஒரு மனிதனாக வ.உ.சியை பயன்படுத்தியுள்ளனர். தியாகிகள் எத்தனையோ பேருக்கு பெயர்கள் வைக்கும் போது பிரச்னை ஏற்பட்ட போது வ.உ.சி.,பெயரை 1986-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் வைக்கும் போது எல்லோரும் வரவேற்றனர். அதிமுக.,மட்டுமே வ.உ.சி.யை கௌரவவித்துள்ளது. காங்.,கட்சி கூட ஒன்றுமே செய்யவில்லை. முதல்வர் ஜெயலலிதா வ.உ.சி.க்கு திருநெல்வேலியில் மணிமண்டபம் எழுப்பி பெருமை சேர்த்தார். போராட்டத்தின் விளைவாக மற்ற இடங்களில் தியாகிகள் பெயர் வைக்கப்பட்டு இருந்த போது எழுந்த பிரச்னையால் நமது மாவட்டம் வ.உ.சிதம்பரனார் மாவட்டம் என்பது கைவிடப்பட்டது வருத்தமான விசயமாகும். வ.உ.சி, பாரதியார், வீரன்சுந்தரலிங்கனார், வீரபாண்டியகட்டபொம்மன் என பெருமை வாய்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் வாழ்ந்த பகுதி ஓட்டப்பிடாரம்.

தேசத்தின் விடுதலைக்காக போராடிய வ.உ.சி.யின் வரலாற்றை அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டும். தேசப்பற்றை அவர்களுக்கு வளர்க்க வேண்டும் இவ்வாறு அமைச்சர் சண்முகநாதன் பேசினார். விழாவில் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழிலாளர் துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் பரிசுகள் வழங்கி பேசினார். விழாவில் கோவில்பட்டி எம்எல்ஏ.,கடம்பூர் ராஜூ, மாவட்ட பஞ்.,தலைவர் சின்னத்துரை, டிஎம்பி.,மெக்கவாய் கிராமிய மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வனஜாமங்களசெல்வி, வ.உ.சி.,யின் வழித்தோன்றல்கள், வ.உ.சி.சங்கரலிங்கம், கொள்ளுப் பேத்தி செல்வி, முன்னாள் எம்எல்ஏ.,க்கள் மோகன், சின்னப்பன், பெரியகுளம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கொம்புமகாராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை