உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தூத்துக்குடி உள்ளாட்சி தேர்தல்இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தூத்துக்குடி உள்ளாட்சி தேர்தல்இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார். தற்போது பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று கூறப்படுகிறது.தமிழகத்தில் அடுத்த மாதம் நடக்க உள்ளாட்சி தேர்தலுக்கு ஏற்கனவே சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்திய வாக்காளர் பட்டியல் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உள்ளாட்சி தேர்தலுக்குரிய வார்டு அடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டது.வாக்குச்சாவடி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஆஷீஷ்குமார் பட்டியலை வெளியிட தூத்துக்குடி மாநகராட்சி இளநிலை பொறியாளர் சரவணன் பெற்றுக் கொண்டார்.இதன்படி மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 380 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியும்.வாக்காளர் பட்டியல் வெளியீடு நிகழ்ச்சியில் எலக்ஷன் பி.ஏ லோகநாதன், சிரஸ்தார் பழனி, பி.டி.ஓ லக்குவன், தேர்தல் பிரிவு மாசாணம், மாநகராட்சி தேர்தல் பிரிவு கண்காணிப்பாளர் ஞானசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ