உள்ளூர் செய்திகள்

விளையாட்டு விழா

சாத்தான்குளம்: சாத்தான்குளம் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா நடந்தது.டவுன் பஞ்.,தலைவர் தங்கத்தாய் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் எட்வர்ட் விளையாட்டு போட்டியைத் துவக்கி வைத்தார். மாணவிகளின் அணிவகுப்பு, லெசீம், கோலாட்டம், யோகா, கூட்டு உடற்பயிற்சி, இறகுபந்து மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் சகோதரி மெர்சி அன்றனி, உதவிப் பங்குத்தந்தை வசந்தன், ஸ்டார்லின், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ