உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / சாத்தை., புனித வளனார்பள்ளியில் ஆண்டு விழா

சாத்தை., புனித வளனார்பள்ளியில் ஆண்டு விழா

சாத்தான்குளம்: சாத்தான்குளம் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.வள்ளியூர் பெட் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் செய்யது அபுதாஹிர் தலைமை வகித்தார். குற்றப்புலனாய்வுத்துறை சப்இன்ஸ்பெக்டர் சார்லஸ் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் மெர்சி அன்றனி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாளாளர் எட்வர்ட் அடிகள் பரிசு வழங்கினார். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், நாடகமும் நடந்தது. உதவி பங்கு தந்தை வசந்தன், திருத்தொண்டன் ஸ்டார்லின் பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி