உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கோவில்பட்டியில் புதிய வழித்தடத்தில்அரசு பஸ் துவக்க விழா

கோவில்பட்டியில் புதிய வழித்தடத்தில்அரசு பஸ் துவக்க விழா

கோவில்பட்டி:கோவில்பட்டியிலிருந்து செவல்பட்டி பிஎஸ்ஆர் கல்லூரி வரையிலான புதிய வழித்தடத்தை எம்எல்ஏ.,கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.கோவில்பட்டி அண்ணா பஸ் ஸ்டாண்டிலிருந்து கூடுதல் பஸ் ஸ்டாண்டிற்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 23ஏ என்ற வழித்தடம் கொண்ட இந்த டவுன் பஸ்சை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயன்படும் வகையில் இயக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து குறிப்பிட்ட அரசு டவுன் பஸ்சை காலை, மாலை இருவேளை செவல்பட்டி பிஎஸ்ஆர் கல்லூரி வரை இயக்க முடிவானது. இந்த புதிய வழித்தடத்திற்கான துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. கோவில்பட்டி அண்ணா பஸ் ஸ்டாண்டில் நடந்த விழாவிற்கு கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக கிளை துணை மேலாளர் குமார் தலைமை வகித்தார். பிஎஸ்ஆர் கல்லூரி தாளாளர் சோலைசாமி முன்னிலை வகித்தார். தொடர்ந்து கோவில்பட்டி எம்எல்ஏ.,கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கொடியசைத்து புதிய வழித்தடத்தை துவக்கி வைத்தார். மேலும் இந்த புதிய வழித்தடத்தில் காலை 8.20 மணிக்கு கோவில்பட்டி அண்ணா பஸ் ஸ்டாண்டில் புறப்பட்டு 9 மணிக்கு மேல் செவல்பட்டி சென்றடையவும், மாலை 3.15 க்கு மீண்டும் புறப்பட்டு செவல்பட்டியில் 4.15க்கு மேல் கோவில்பட்டிக்கு இயக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. துவக்க விழாவில் அண்ணா தொழிற்சங்க டிப்போ செயலாளர் பொன்ராஜ், கோவில்பட்டி அதிமுக., நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், ஜெ.,பேரவை நகர செயலாளர் ராமர், ஒன்றிய செயலாளர் ஈஸ்வரபாண்டியன், அமைப்பு சாரா ஓட்டுனரணி மாவட்ட செயலாளர் சங்கரபாண்டியன், யூனியன் கவுன்சிலர் நாகராஜன், 14வது வட்ட செயலாளர் கனகசுந்தரம், 5வது வார்டு பிரதிநிதி கந்தசாமி, முன்னாள் துணைச் சேர்மன் ரத்தினவேலு, சிறுபான்மைப்பிரிவு மாவட்ட இணை செயலாளர் சுல்தான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ