உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தேமுதிக.,7ம் ஆண்டு துவக்க விழா

தேமுதிக.,7ம் ஆண்டு துவக்க விழா

கோவில்பட்டி:கோவில்பட்டியில் நடந்த தேமுதிக.,ஏழாம் ஆண்டு துவக்க விழாவில் சிறுவர் இல்லத்தில் அன்னதானம் நடந்தது.கோவில்பட்டி நகர கிளை சார்பில் புதுரோட்டில் நடந்த தேமுதிக.,ஏழாம் ஆண்டு துவக்க விழாவிற்கு நகர செயலாளர் சண்முகராஜா தலைமை வகித்தார். பொருளாளர் பழனி முன்னிலை வகித்தார். 14வது வார்டு கிளை செயலாளர் பாலமுருகன் வரவேற்று பேசினார். வடக்கு மாவட்ட செயலாளர் பொன்ராஜ் கொடியேற்றி வைத்து பேசினார். பின்னர் கடலையூர் ரோட்டில் உள்ள சிறுவர் இல்லத்தில் அன்னதானம் நடந்தது. விழாவில் மாநில பொறியாளர் அணி செயலாளர் சீனிவாசராகவன், மாநில தொழிற்சங்க பேரவை துணை தலைவர் ஆறுமுகநயினார், இளைஞரணி துணை செயலாளர் கார்த்திக்குமார், வர்த்தகஅணி துணை செயலாளர் மலைராஜ், கலை இலக்கிய அணி செயலாளர் நல்லையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை 14வது வார்டு தேமுதிக.,நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை