| ADDED : செப் 21, 2011 01:12 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா
வரும் 24ம் தேதி துவங்குகிறது. நான்காம் சனிக்கிழமை ஐந்து கருடசேவை
நடக்கிறது.தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி
சனிக்கிழமை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல ஆயிரக்கணக்கான
பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டும்
புரட்டாசி சனிக்கிழமை விழாவை மிக சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டு
அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. புரட்டாசி முதல் சனிக்கிழமையான
வரும் 24ம் தேதி காலை 6 மணிக்கு கோபூஜையுடன் பூஜைகள் துவங்குகிறது.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள், நடக்கிறது. வைகுண்டபதி பெருமாள் சத்யநாராயணா
அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இரவு 9 மணிக்கு கருடசேø வ
நடக்கிறது. இது போன்று நான்கு சனிக்கிழமையும் விசேஷ பூஜைகள், சிறப்பு
அலங்கார, தீபாரதனைகள் நடக்கிறது. இரண்டாவது சனிக்கிழமை பெருமாள்
குருவாயூரப்பன் அலங்காரத்திலும், மூன்றாவது சனிக்கிழø ம ஸ்ரீமன்நாராயணர்
அலங்காரத்திலும், நான்காம் சனிக்கிழமை திருப்பதி வெங்கடாஜலபதி
அலங்காரத்திலும் வை குண்டபதி பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
விழாவில் சிறப்பு அம்சமாக நான்காம் சனிக்கிழமை அன்று ஐந்து கருட சேவை
நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தக்கார்
கசங்காத்தபெருமாள், அர்ச்சகர் வைகுண்டராமன் மற்றும் கோயில் ஊழியர்கள்
செய்து வருகின்றனர். புரட்டாசி மா தம் பெருமாளுக்கு உகந்தமாதம் என்பதாலும்
அதுவும் புர ட்டாசி சனிக்கிழமை மிக விசேஷம் என்பதால் அன்று கோயிலுக்கு
கடும் கூட்டம் வ ரும் என்பதால் பக்தர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும்,
பக்தர்கள் சிரமம் இன்றி பெருமாளை தரிசிக்க கம்பு தடுப்புகள் போன்றவையும்
செய்யப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி உண்டியலும்
வைக்கப்பட உள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.