உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / செந்தூரில் கூடன்குளம் திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

செந்தூரில் கூடன்குளம் திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் கூடன்குளம் அணு உலை திட்டத்தை கைவிடக்கோரி கரங்கள் மக்கள் இயக்க பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருச்செந்தூரில் நேற்று அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் மற்றும் கரங்கள் மக்கள் இயக்கத்தின் மகளிர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அணுஉலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கரங்கள் மக்கள் அமைப்பு தலைவர் ரோஸ்மலர் வரவேற்று பேசினார். ஒன்றிய தலைவர் நேவிஸ்ஸால் தலைமை வகித்தார். கரங்கள் மக்கள் கூட்டமைப்பினர் செல்வி, ஜோதி, ராஜேஸ்வரி, வளர்மதி, ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ண மூர்த்தி, தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோன்மணி, நாம் தமிழர்கட்சி இளையவன், மனித உரிமைக்கான மக்கள் கூட்டணி மாநில செயலாளர் பெனடிக் ஆகியோர் பேசினார். கரங்கள் மக்கள் அமைப்பு செல்வம் நன்றி கூறினார்.மேலும் கூடன்குளம் அணுஉலை பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருக்கும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் துரைசிங் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தமிழ் செல்வன் முன்னிலை வகித்தார். ஆத்தூர் வியாபாரி சங்கதலைவர் பக்கிள்துரை, செயலர் வேட்டை பெருமாள், ஆறுமுகநேரி வியாபாரிகள் சங்க ராஜசிங், உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் ரவி, செல்வராஜ், ஐக்கிய சமாதான பேரவை மாநில தலைவர் ஹாமித் பக்கிரி, பரமன்குறிச்சி வியாபாரிகள் சங்க தலைவர் பால்பாண்டியன், பொது செயலாளர் அப்துல் அஜிகர், மதிமுக., மாநில செயற்குழு உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன், மதிமுக., மாவட்ட பொருளாளர் காயல் அமானுல்லா, அமலி நகர் ஊர் தலைவர் அமல ஜோதி, யாதவ் வியாபாரிகள் சங்கதலைவர் வள்ளிநாயகம், உபதலைவர் ஆறுமுகம், நகர அனைத்து வியாபாகிள் சங்க துணைத்தலைவர் கார்க்சி, முன்னாள் தலைவர் மகாதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பஸ்கள் மாற்றுதடத்தில் இயக்கம்மணப்பாடு - உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் பஸ்கள் நேற்று இரண்டாவது நாளாக பரமன்குறிச்சி வழியாக இயக்கப்பட்டது. தூத்துக்குடி செல்லும் பஸ்கள் அம்மன்புரம் மூலக்கரை வழியாக மாற்று பாதையில் இயக்கப்பட்டது. ஆலந்தலை, அமலிநகர் பகுதிகளில் பைபர் படகுகள், கடந்த 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. திருச்செந்தூர் நகரில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ