உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்தூர் சூரசம்ஹார விழா 31ல் உள்ளூர் விடுமுறை

திருச்செந்தூர் சூரசம்ஹார விழா 31ல் உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி:திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 31ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹார விழாவை ஒட்டி வரும் 31ம் தேதி திங்கட்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. எனினும் அன்று அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுப்பு பொருந்தாது. செலவாணி முறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக 12.11.2011 வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ