உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மனு

கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மனு

தூத்துக்குடி : கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிருஷ்ணாநகர் பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். கோவில்பட்டி கிருஷ்ணாநகர் பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறியுள்ளதாவது; கோவில்பட்டியில் உள்ள கிருஷ்ணாநகர் பகுதியில் நகராட்சி குப்பைகளை கடந்த 10 ஆண்டுகளாக கொட்டி வருகின்றனர். குப்பையை கொட்டுவதற்கு சுமார் 3 ஏக்கர் நிலம் மட்டும் நகராட்சிக்கு சொந்தமானது. அவற்றில் குப்பையை கொட்டாமல் தனியார் பிளாட்டுகளில் கொட்டி வருகின்றனர். தற்போது தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலமாக விற்பனை செய்யப்பட்ட பிளாட்டுகளில் வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறோம். மேலும் தற்போது கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள மந்தித்தோப்பு பகுதி நகர் மயமாகி வருவதால் வீடுகளுக்கு நடுவில் குப்பை கொட்டி வருவதை நிறுத்தக்கோரியும், நகராட்சிக்கு சொந்தமான இடத்தை குறிப்பிட்டு அதில் பாதுகாப்பாக சுகாதாரக்கேடு இல்லாமல் குப்பையை தட்டுமாறும் கூறி பொதுமக்கள் சார்பில் 28-6-11 மற்றும் 15-8-11 ஆகிய தேதிகளில் மறியல் நடைபெற்றது. 16-8-11 தேதியன்று கோவில்பட்டி தாசில்தார் முன்னிலையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் மூன்று முடிவுகள் எடுக்கப்பட்டது. சமாதானக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நகராட்சி நிர்வாகம் இதுவரையிலும் செயல்படுத்தவில்லை. எனவே பொதுமக்கள் சார்பில் சமாதான கூ ட்ட முடிவுகளை செய்து விட்டு அதன் பின்னர் குப்பையை கொட்டுமாறு நகராட்சி கமிஷனரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நகராட்சி கமிஷனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பெரிய பிரச்னையையும் ஏற்படுத்திவிட்டார். நகராட்சி கமிஷனரின் செயல்பாட்டினால் கோவில்பட்டியில் ஜாதிமோதல் உருவாக்ககூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி கமிஷனர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் குப்பையை கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் தங்களது புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி