மேலும் செய்திகள்
விபத்தில் 2 வாலிபர்கள் இறப்பு
04-Oct-2025
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட என்சிசி மாணவர்கள் சார்பா புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம், பேரணி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியியில் நடந்தது. கருத்தரங்கிற்கு சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் யாகு சே.ச அடிகளார் முன்னிலை வகித்தார். தரைப்படை அதிகாரி செல்வன் சில்வா வரவேற்றார். புகையிலை மற்றும் போதைப்பொருட்களினால் ஏற்படும் தீமைகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு கருத்துக்கள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. புகையிலைக்கு எதிரான உறுதிமொழியையும் மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். அதைத்தொடர்ந்து புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை சுந்தரலிங்கம் கொடியசைத்து துவக்கிவைத்தார். பேரணியில் பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளி, காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி ,செயின்மேரீஸ் மேல்நிலைப்பள்ளி, விவிடி, மேல்நிலைப்பள்ளி,காமராஜ் கல்லூரி சேர்ந்த என்சிசி மாணவர்கள் கலந்துகொண்டனர். பேரணியை அதிகாரிகள் சீனிவாசன், சில்வா, கில்பர்ட், ஆல்பன், பிரசாத் மற்றும் ஹெலன்மேரி ஆகியோர் பேரணியை வழிநடத்தினர்.கப்பற்படை அதிகாரி கில்பர்ட் நன்றிகூறினார்.
04-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025