| ADDED : செப் 24, 2011 01:50 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அவைத் தலைவர் சுசி.ரவீந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர் பெரியசாமி, முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் நடந்தகூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது; சட்டசபை தேர்தலில் எதிர்பாரதாவிதமாக திமுகவிற்கு தோல்வி ஏற்பட்டது. ஒற்றுமையாக நாம் செயல்பட்டால் திமுகவினரை உடைக்க எந்த சக்தியாலும் முடியாது. அதிமுகவிற்கு பயப்பட வேண்டியதில்லை. பொய் வழக்கு போட்டு நம்மை மிரட்டலாம் என்று நினைக்கிறார்கள். மக்கள் மத்தியில் அது எடுபடாது.அதிமுக மேயர் வெற்றி பெற்றால் தான் அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். இல்லை என்றால் நிதி ஒதுக்கீடு வராது என்று அதிமுகவினர் பொய் பிரசாரம் செய்கின்றனர். மத்திய, மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டை பொறுத்தமட்டில் மக்கள் தொகை அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. எந்த அரசு இருந்தாலும் இதனை மாற்ற முடியாது. இதனை வாக்கு கேட்க செல்லும் போது வீடு, வீடாக மக்களுக்கு திமுகவினர் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். மேயர் வேட்பாளர் பொன் இனிதாவை அறிமுகம் செய்து வைத்து மாவட்ட செயலாளர் பெரியசாமி பேசியதாவது; திமுக தலைவர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பொன் இனிதா. திமுகவின் ஆரம்பகால விசுவாசியாக, கட்சியில் பல பதவிகளை வகித்த காசிநாடார் மருமகள். கட்சியின் விசுவாசி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தற்போது திமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்கின்றனர். என்னை கூட விசாரணை என்ற பெயரில் பொய் வழக்குக்காக விசாரணை நடத்தினர். நாம் தலைநிமிர்ந்து நடமாட வேண்டும் என்றால் திமுகவினர் உள்ளா ட்சி தேர்தலில் நல்ல வெற்றியை பெற்றாக வேண்டும். வெற்றி ஒன்று தான் குறிக்கோள் என்று செயல்பட வே ண்டும்.இவ்வாறு அவர் பேசினார். வேட்பாளர் பொன் இனிதா பேசுகையில், தனக்கு சீட் அளித்த திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், பரிந்துரை செய்த மாவட்ட செயலாளர் பெரியசாமி, முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். தூத்துக்குடி மேயராக தன்னை தேர்வு செய்ய கட்சியினர் உழைக்க வேண்டும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் மேயராகி நிறைவேற்றி கொடுப்பேன் என்றார். கூட்டத்தில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன்செல்வின், இலக்கிய அணிச் செயலாளர் திருச்சிற்றம்பலம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.