மேலும் செய்திகள்
திருத்தணி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
26-May-2025
துாத்துக்குடி: வைகாசி விசாகம் விழாவில், திருச்செந்துார் கோவிலில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரினசம் செய்தனர்.விசாக திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து மற்ற கால பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்துாரில் குவிந்தனர். அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர்.பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள், வேல்களால் அலகு குத்தி, பாதயாத்திரையாக வந்து, நேர்த்தி கடன் செலுத்தினர்.சில பக்தர்கள் புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்து வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தியும், அங்கபிரதட்சனம் செய்தும் வழிபட்டனர்.சுவாமிமலை, பழநி உட்பட தமிழகம் முழுதும் பல்வேறு முருகன் கோவில்களிலும், வைகாசி விசாக திருவிழா வெகுவிமரிமையாக நடந்தது.
26-May-2025