உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கல்குவாரிக்கு எதிர்ப்பு; கிராம மக்கள் போராட்டம்

கல்குவாரிக்கு எதிர்ப்பு; கிராம மக்கள் போராட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே நெடுங்குளத்தில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. அங்கு, அடிக்கடி வெடிவைத்து பாறைகள் உடைக்கப்படுவதால் வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் கல்குவாரியை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.இந்நிலையில், நெடுங்குளத்தில் செயல்படும் கல்குவாரியை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் அங்குள்ள பால்பண்ணை முன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளை கண்டித்து அவர்கள் கண்களில் கறுப்பு துணி கட்டி இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.சாத்தான்குளம் தாசில்தார் இசக்கி முருகேஸ்வரி, டி.எஸ்.பி., சுபகுமார் உள்ளிட்டோர் கிராம மக்களிடம் பேச்சு நடத்தினர். கல்குவாரி அகற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என மக்கள் தெரிவித்ததால் சம்பந்தப்பட்ட கல்குவாரியை கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்வார் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.இதையடுத்து, போராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள், 'கல்குவாரிவை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒப்படைத்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்' என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை