உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்துாரில் மாடு முட்டி பெண் காயம்

திருச்செந்துாரில் மாடு முட்டி பெண் காயம்

துாத்துக்குடி:சென்னை பெருங்குளத்துாரை சேர்ந்த தேவன்- - ஆதிலட்சுமி தம்பதியினர் நேற்று முன்தினம் திருச்செந்துார் வந்தனர்.துாண்டிகை விநாயகர் கோயிலில் தரிசனம் செய்து விட்டு, முருகன் கோயிலுக்கு அவர்கள் நடந்து சென்றனர்.அப்போது, சாலையில் நின்று கொண்டிருந்த மாடு ஒன்று திடீரென எதிர்பாராத நேரத்தில் ஆதிலட்சுமி, 45, மீது வேகமாக மோதியது.கீழே விழுந்த ஆதிலட்சுமிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக திருச்செந்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த சம்பவம் அங்கிருந்த 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது, அந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !