மேலும் செய்திகள்
மாணவர் விடுதிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
20-Nov-2024
துாத்துக்குடி ; துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், திருச்செந்துார் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு செய்தார். வீரபாண்டியன்பட்டினத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி, ஆதி திராவிடர் மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள், அரசு மனநல காப்பகம் ஆகியவற்றில் அவர் ஆய்வு செய்தார்.திருச்செந்துார் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியில் ஆய்வு செய்தபோது, மாணவர்களுக்கு வழங்கிய உணவு மஞ்சள் நிறத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடன் சமையலரை அழைத்து, காரணம் கேட்டார்.விடுதிக்கு வழங்கும் அரிசி மஞ்சள் நிறத்தில் இருந்ததாக அவர் பதில் அளித்தார். மாணவர்களுக்கு தரமான உணவை வழங்க வேண்டும், தண்ணீர் சுத்தமாக வழங்கப்பட வேண்டும் என கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டார்.மேலும், விடுதியில் தங்கி இருந்த 40 மாணவர்களிடமும், 'ஏதேனும் குறைகள் இருந்தால் கூறுங்கள்' என கேட்டு அவர்களுடன் கலந்துரையாடினார். மாவட்டத்தில் உள்ள மாணவ - மாணவியர் விடுதிகளுக்கு தரமான அரிசி மற்றும் உணவு பொருட்களை வழங்க, அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
20-Nov-2024