உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / 8 ஆடுகளை குதறிய சிறுத்தை

8 ஆடுகளை குதறிய சிறுத்தை

வாணியம்பாடி:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெரிய வாணியம்பாடியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 40, அப்பகுதியிலுள்ள தன் விவசாய நிலத்தில் ஆட்டு பண்ணை வைத்துள்ளார். அதில் நேற்று முன்தினம் இரவு புகுந்த சிறுத்தை, எட்டு ஆடுகளை கடித்து குதறியது.வாணியம்பாடி வனத்துறையினர், சம்பவ இடம் சென்று சிறுத்தையின் காலடி தடத்தை வைத்து விசாரித்தனர். சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர், கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கின்றனர். எனினும், இதுவரை, அந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை சிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை