உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / தொழிலதிபர் கடத்தல்: 3 பேர் சிக்கினர்

தொழிலதிபர் கடத்தல்: 3 பேர் சிக்கினர்

திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், இடையம்பட்டியைச் சேர்ந்தவர் பீடி கம்பெனி உரிமையாளர் தியாகராஜ், 39, இளைஞர், காங்., முன்னாள் மாநில செயலர். ஆக. 23ல், கார் உரிமத்தை புதுப்பிக்க, ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த, எட்டு பேர்கும்பல், அவரை கத்தி முனையில் கடத்தி, ஒரு வீட்டில் அடைத்தது. அவரது உறவினர் அரவிந்த் என்பவரின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டு, தியாகராஜை விடுவிக்க, 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியது.அவர், 12 லட்சம் ரூபாய் கொடுத்து, உறவினரை மீட்டார். மர்ம கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த தியாகராஜ், நேற்று முன்தினம் அளித்த புகார் படி, கந்திலி போலீசார், மூவரை நேற்று பிடித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை