உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / ரூ.20 கோடி சொத்துக்கள் போலி சான்றில் அபகரிப்பு?

ரூ.20 கோடி சொத்துக்கள் போலி சான்றில் அபகரிப்பு?

திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், இடையம்பட்டியைச் சேர்ந்தவர் லீலாவதி, 85, தற்போது சென்னையில் வசிக்கிறார். இவருக்கு, இரு மகள், இரு மகன். மூத்த மகள் சாந்தி, ஆந்திர மாநிலம் பாகாலாவைச் சேர்ந்த பாபு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகன் கிஷோர்.கணவருடன் சென்னையில் தங்கிய சாந்தி, விடுதி காப்பாளராக பணியில் சேர்ந்தார். விடுதி உரிமையாளர் விடுதியை நடத்த முடியாத நிலையில், சாந்தி தன் தாய் லீலாவதியிடம் பணத்தை பெற்று, அந்த விடுதியை வாங்கினார். விடுதியில் மேலாளராக, நங்கநல்லுாரைச் சேர்ந்த கிரிராஜ் என்பவரை நியமித்தார். அவருடன் சாந்திக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.இதனால், கணவர் பாபு ஆந்திரா சென்று விட்டார். மூன்று ஆண்டுகளுக்கு முன், உடல் நலக்குறைவால், சாந்தி இறந்து விட்டார். லீலாவதி மற்றும் அவரது பேரன் கிஷோர், சாந்தியின் சொத்துக்களை உரிமை கொண்டாட முயன்றனர்.அப்போது, கள்ளக்காதலன் கிரிராஜ், தான், சாந்தியின் கணவர் எனவும், அந்த சொத்துக்கு வாரிசு எனவும், சாந்தியின் தாய் லீலாவதி இறந்து விட்டதாகவும், போலி ஆவணம் தயார் செய்து வாரிசு, இறப்பு சான்று பெற்று, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள விடுதியை அபகரித்தது தெரியவந்தது. இதனால், போலி ஆவணங்களால் வாரிசு மற்றும் இறப்பு சான்று பெற்ற கிரிராஜ், உடந்தையாக இருந்த அவர் மகன் கிரண்குமார் ஆகியோர் மீது, நடவடிக்கை கோரி, திருப்பத்துார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், மூதாட்டி லீலாவதி புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்