உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / மது விற்றவரை பிடித்த போலீசை தாக்கிய ஐந்து பெண்கள் கைது

மது விற்றவரை பிடித்த போலீசை தாக்கிய ஐந்து பெண்கள் கைது

திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், மாடப்பள்ளி கிராமத்தில், வெளிமாநில மது பாக்கெட்டுகள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பதாக, திருப்பத்துார் எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. போலீசார், அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். அங்கு மது பாக்கெட் விற்ற திருப்பத்துார் போஸ்கோ நகரைச் சேர்ந்த ராம் என்பவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர் போலீசாரை தாக்கினார். அவருக்கு ஆதரவாக, அப்பகுதியில் இருந்த பெண்கள் சிலரும் போலீசாரை தாக்கினர். இதையடுத்து, சென்னம்மாள், 32, நந்துபிரியா, 22, உள்ளிட்ட ஐந்து பெண்களை போலீசார் கைது செய்து, தப்பியோடிய ஐந்து ஆண்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ