உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / ஒரே நாளில் கந்தலானது ரூ.97.84 லட்சம் தார்சாலை

ஒரே நாளில் கந்தலானது ரூ.97.84 லட்சம் தார்சாலை

ஆம்பூர்:திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேல் கூர்மாபாளையம் அடுத்த ரங்காபுரம் முதல் ராளகொளத்துார் வரை, முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2.65 கி.மீ., துாரம் தார் சாலை, 97.84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், போடப்பட்டது.இந்த சாலை தரமற்று காணப்பட்டதால், போட்ட ஒரே நாளில் சாலை குண்டும் குழியுமாக கந்தலாகி போனது. இது குறித்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், தரமற்ற சாலை அமைத்த கான்ட்ராக்டர் மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை