மேலும் செய்திகள்
பாதரை பஞ்., தலைவர், துணைத் தலைவர் தேர்வு
31-Aug-2024
திருப்பத்துார் : திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி வள்ளி, 45. இவர் அரசு திட்டத்தில் வீடு கட்டி தருமாறு பஞ்., அலுவலகத்தில் மனு அளித்தார். பஞ்., நிர்வாகம் பரிசீலித்தபோது, அவர் பெயரில் ஏற்கனவே, 2015 - 16ல் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்டப்பட்டது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த வள்ளி, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார்.மாதனுார் பி.டி.ஓ., சிவலிங்கம் விசாரித்தார். கடந்த 2015 - 16ல் பஞ்., செயலராக பணிபுரிந்த ரமேஷ், முறைகேடு செய்தது தெரியவந்தது. இது தொடர்பான அறிக்கை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, மேல் சாணாங்குப்பம் பஞ்., செயலராக பணிபுரியும் ரமேஷை, 'சஸ்பெண்ட்' செய்து பி.டி.ஓ., சிவலிங்கம் உத்தரவிட்டார்.
31-Aug-2024