உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / மண் கடத்தலில் ஈடுபட்ட ஊர்க்காவல் படை வீரர் கைது

மண் கடத்தலில் ஈடுபட்ட ஊர்க்காவல் படை வீரர் கைது

திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, ஏரியில் மண் கடத்திய, ஊர்க்காவல் படை வீரரை, போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்டம் குருசிலாப்பட்டை அடுத்த பாப்பனுார் ஏரியில், மண் கடத்துவதாக போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி வி.ஏ.ஓ., ராமன், மற்றும் போலீசார் ஏரிக்கு நேற்று சென்றனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரியில் சோதனை செய்ததில் மண் கடத்தியது தெரிந்தது. லாரியில் வந்தவரை பிடித்து விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த சவுந்தரபாண்டியன், 30, ஊர்க்காவல் படை வீரர் என்பது தெரியவந்தது. திருப்பத்துார் தாலுகா போலீசார் லாரியை பறிமுதல் செய்து, சவுந்தரபாண்டியனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை