உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண் பலாத்காரம்; வாலிபர் கைது

தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண் பலாத்காரம்; வாலிபர் கைது

திருப்பத்துார்:திருப்பத்துார் அடுத்த புதுார் நாடு மலை கிராமத்தை சேர்ந்தவர் விறகு வெட்டும் தொழிலாளி சிவக்குமார், 28. நேற்று அவர், வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றார். அப்போது, அப்பகுதியில் வீட்டில் தனியாக இருந்த, 45, வயது பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். அவர், வீட்டினுள் தண்ணீர் எடுத்து வர சென்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்ற சிவக்குமார், வீட்டின் கதவை பூட்டி, அப்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து தப்பினார்.அவரை நேற்று, திருப்பத்துார் தாலுகா போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ